பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்து இறந்த டாஸ்மாக் விற்பனையாளர்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுார் டாஸ்மாக் விற்பனையாளர் கொரோனா பாதித்து இறந்தார்.புவனகிரி அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 45; இவர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுாரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்தார். கடந்த 22ம் தேதி லேசான காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் குறையவில்லை. பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 24ம் தேதி கடலுார் அரசு மருத்துவமனை சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.தொடர்ந்து அளித்த சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். அவரது உடல் ராமமூர்த்தியின் சொந்த ஊரான பூவாலை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் மூன்று மணி நேரம் கடையை மூடி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X