முரட்டு வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றிட விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முரட்டு வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றிட விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூலை 29, 2020
Share

புவனகிரி; புவனகிரி அருகே ஆலம்பாடி வழியாக செல்லும் முரட்டு வாய்க்காலில், ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரி தேவையான இடங்களில் கதவணை கட்ட வேண்டும்.காவிரியில் இருந்து வரும் தண்ணீரை, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வாலாஜா ஏரியில் இருந்து முரட்டு வாய்க்கால் வழியாக கொண்டு வந்து புவனகிரி அடுத்த ஆலம்பாடி சுற்றிய கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்கின்றனர்.கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தனர். இதனால் வயல்களில் கோடை உழவு மேற்கொண்டு, ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றனர். முரட்டு வாய்க்காலின் இரு பக்கமும் ஆக்கிரமிப்பால் குறுகலாகவும், முட்புதர்கள் மண்டியதால் மழை காலங்களில் தண்ணீர் வடியாமலும், மற்ற காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமலும் கடும் அவதியடைகின்றனர். குடிமராமத்து பணி மூலம் இப்பகுதியில் துார்ந்துள்ள வாய்க்காலை துார்வாரி, இரு பக்கமும் ஆக்கிரமிப்பை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X