பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி தண்ணீரை விற்பதாக குற்றச்சாட்டு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

வடலுார்; வடலுார் பேரூராட்சிக்கு சொந்தமான நீர்தேக்க தொட்டியில் இருந்து அனுமதியின்றி சிலர் குடிநீர் எடுத்து விற்பதால் நிலத்தடி நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.வடலுார் பேரூராட்சி, 10வது வார்டு, ஞான சபை வீதியில் பேரூராட்சிக்கு சொந்தமான, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து தினசரி அதிக அளவில் டிராக்டர்களில் முறைகேடாக சிலர் தண்ணீர் விற்கின்றனர். வடலுார் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், தண்ணீர் எடுத்து விற்பதால் வருங்காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தினம் 8 முதல், 10 முறை டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு சென்று, புதிதாக கட்டப்படும் கடைகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும், பேரூராட்சி அதிகாரிகள் ஆதரவோடு முறைகேடாக விற்பதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் கூறுகையில், பேரூராட்சி சார்பில் யாருக்கும் தண்ணீர் விற்கவில்லை என்றார்.வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்புகள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடலுார் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X