தமிழ்நாடு

சேதம்: கனமழைக்கு குறுவை நெல் மூட்டைகள்...பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கவலை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 சேதம்:  கனமழைக்கு குறுவை நெல் மூட்டைகள்...பெண்ணாடம் பகுதி விவசாயிகள் கவலை

பெண்ணாடம்; பெண்ணாடம் பகுதியில் பெய்த திடீர் கனமழை காரணமாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள நெல் முற்றிலும் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் இரண்டு இடங்களில் கடந்த வாரம் துவங்கப்பட்டது.இங்கு வெண்கரும்பூர் மற்றும் சுற்றியுள்ள பெண்ணாடம், கொத்தட்டை, மாளிகைக் கோட்டம், அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார், செம்பேரி, சவுந்திரசோழபுரம், இருளம்பட்டு, சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், துறையூர், முருகன்குடி, காரையூர், தீவளூர், தாழநல்லுார், நந்தப்பாடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல்லை மூட்டைகளாகவும் மற்றும் டிராக்டர் டிப்பரிலும் கொண்டு வந்து தரையில் கொட்டியும் வைத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பெய்த திடீர் கனமழை காரணமாக இரு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனைக்கு வைத்திருந்த 3,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, மழைநீர் குளம்போல் தேங்கியது.

இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.காரையூர் கிராம விவசாயி ஒருவர் கூறுகையில், 'நாங்கள் கடந்த வாரம் குறுவை அறுவடை செய்து நெல் மூட்டைகளை விற்க டிராக்டர் டிப்பரில் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளோம். ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் செய்ய தாமதமானது. நேற்று பெய்த கனமழைக்கு தரையில் கொட்டி வைத்துள்ள நெல் மற்றும் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளும் நனைந்துள்ளன.

இதனால் நெல்லில் ஈரப்பதம் உள்ளதால் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொள்முதல் பணியை விரைந்து முடித்து, அன்றே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X