பொது செய்தி

தமிழ்நாடு

ெஷட் இன்றி திறந்த வெளியில் இயங்கும் தற்காலிக மார்க்கெட்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் - சிதம்பரம் சாலையில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் ெஷட் வசதி இல்லாமல், வியாபாரிகள் மழையால் பாதிக்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க, கடலுாரில் பான்பரி மார்க்கெட் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்திற்கும், அண்ணா மார்க்கெட் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட், மார்க்கெட் கமிட்டிக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.பஸ் போக்குவரத்து துவங்கியதையடுத்து, பஸ் நிலையத்தில் இயங்கிய பான்பரி மார்க்கெட் சிதம்பரம் சாலையில் தனியார் இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் போதுமான வசதிகள் இல்லை. பொதுமக்களும் வரமாட்டார்கள் என கூறி, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்து, நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தர விட்டார். இதனால் ஒட்டுமொத்த மார்க்கெட்டும், இம்பீரியில் சாலைக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.இங்கு இடமாற்றம் செய்யப்பட்டு, ஒரு மாதமாகியும் இதுவரை கடைகளுக்கு ெஷட் அமைத்து தரவில்லை. தற்போது, மழை துவங்கி, பொருட்கள் மழையில் நனைவதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கின்றனர். உடனடியாக ெஷட் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X