பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீசார் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர்.டி.எஸ்.பி., மகேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடைவீதிக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கின்றனர். அதேபோல் வடக்கு வீதியில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.போலீசாரின் இந்த நடவடிக்கையால் கடைவீதியில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி வியாபாரிகள் புகார் கூறி வரும் நிலையில், நோய் தொற்று பரவலைத் தடுக்க கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டி, உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X