பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியூர் வாரச் சந்தை நடைபெறாததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் முடக்கம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்; அத்தியூர் கால்நடை வாரசந்தை நடைபெறாததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் முடங்கியது.ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூரில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை கால்நடை சந்தை நடைபெறும். இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவர்.இறைச்சி கடை வைத்திருப்பவர்களும், பொதுமக்களும் சந்தைகளில் விற்பனையாகும் கால்நடைகளை வாங்கிச் செல்வர். காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெறும். பண்டிகை நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடைகள் விற்பனையாகும்.தற்போது, ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் பலர், தங்கள் குடும்பத்தினருடன் குல தெய்வம் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.குறிப்பாக ஆடி 18 தினத்தன்று பொதுமக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, இறைச்சி உண்டு மகிழ்வர்.இதற்காக ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்காக அத்தியூர் சந்தைக்கு வருவர். ஆடி 18க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அத்தியூர் வார சந்தை நடைபெறாததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் முடங்கியது.மேலும், ரம்ஜான், ஆடி-18, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது விற்பனை செய்வதற்காக கால்நடை வளர்த்த விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X