வாடகை கட்டடத்தில் அரசு மருத்துவமனை இட வசதியின்றி பொதுமக்கள் அவதி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கச்சிராயபாளையம்; தொரடிபட்டு கிராமத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வராயன்மலையில் உள்ள தொரடிபட்டுஊராட்சியில் எருக்கம்பட்டு, மோட்டுவளவு, புளியந்துறை, மட்டப்பட்டு, வண்டகபாடி, கவியம், முண்டியூர் உட்பட 12 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக தொரடிபட்டு கிராமத்தில் மருத்துவர், மருந்தாளுநர் பணி அமர்த்தப்பட்டு அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.மருத்துவமனைவாடகைக்கட்டடத்தில் சின்ன அறையில் இயங்கி வருகிறது.டாக்டர் அமர்வதற்கும், மருந்துகள் வைக்கவும் இடமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இம்மருத்துவமனைக்கு போதிய வசதி இல்லாததால் டாக்டர்கள் பணி மேற்கொள்ளமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இப்பகுதிக்கு பணியமர்த்தப்படும் மருத்துவர்கள் இங்கு பணிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்காக 30 கி.மீ.,தொலைவில் உள்ள மாவடிப்பட்டு அரசு பொது சுகாதார நிலையத்திற்குச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, தொரடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X