நிதியுதவி பெறாத மாற்றுத்திறனாளிகள்சான்றுகளை சமர்ப்பித்து பயனடையலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நிதியுதவி பெறாத மாற்றுத்திறனாளிகள்சான்றுகளை சமர்ப்பித்து பயனடையலாம்'

Added : ஜூலை 29, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நிதியுதவி பெறாத மாற்றுத்திறனாளிகள், தங்களது சான்றுகளை வி.ஏ.ஓ., விடம் சமர்ப்பித்து நிவாரண தொகை பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:முதல்வர் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி முதல் தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நிதியுதவி பெறாத மாற்றுத் திறனாளிகள், தங்கள் பகுதிக்குட்பட்ட வி.ஏ.ஓ., விடம் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் ஒரு புகைப்படத்தினை சமர்ப்பித்து நிவாரண தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிவாரண தொகை வருமானம், உச்ச வரம்பின்றி நீல நிறத்தில் அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.எனவே கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த நிவாரணம் கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகள் நாளை 31ம் தேதிக்குள் அசல் சான்று மற்றும் நகல்களை வி.ஏ.ஓ., விடம் சமர்ப்பித்து நிவாரண தொகை பெற்று பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X