கார் கவிழ்ந்து எஸ்.ஐ., படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கவிழ்ந்து எஸ்.ஐ., படுகாயம்

Added : ஜூலை 29, 2020
Share
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜம்புலிங்கம், 25; இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். காரை விருகாவூரைச் சேர்ந்த சண்முகம், 21; ஓட்டினார்.விருகாவூரில் கூத்தக்குடி -

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜம்புலிங்கம், 25; இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். காரை விருகாவூரைச் சேர்ந்த சண்முகம், 21; ஓட்டினார்.விருகாவூரில் கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் வந்தபோது, சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி கார் கவிழ்ந்தது.இதில், சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்திற்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன், கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சண்முகம் காயமின்றி தப்பினார். வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X