பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி பருத்தி விதைப்பு பணி தீவிரம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

தியாகதுருகம்; தியாகதுருகம் பகுதியில் மானாவாரி பருத்தி விதைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தியாகதுருகம் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டு தோறும் மானாவாரி பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்வதைப் பொருத்து ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் இறுதி வரை விதைப்பு பணி நடைபெறும்.தொடர்ந்து வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து டிசம்பர் மாதத்தில் பருத்தி பஞ்சு அறுவடைக்கு தயாராகும்.பருத்தி வயலில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு கன மழை பெய்யாமல் சீராக மழை பொழிவு இருந்தால் அதிக மகசூல் பெறமுடியும். கடந்தாண்டு மானாவாரி பருத்தி நல்ல பலனை ஈட்டித் தந்தது.இவ்வாண்டும் குறித்த பருவத்தில் பருவமழை கை கொடுத்துள்ளதால் தற்போது விதைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 8000 ஏக்கர் பரப்பில் மானாவாரி பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டைப் போல் தொடர்ந்து மழை கைகொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X