பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., அலுவலகம் மாற்றம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., அலுவலகம் தற்காலிகமாக அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தற்காலிகமாக குதிரைச்சந்தல் அரசு பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சியிலிருந்து அலுவலகத்திற்கு சென்றுவர போதிய பஸ் வசதியின்மை மற்றும் மின்தடை, இணையதள சேவை கிடைக்காதது போன்ற காரணங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, கல்வித்துறை இயக்குனருக்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்து கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள டி.இ.ஓ., அலுவலகத்திற்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் சி.இ.ஓ., அலுவலகம், கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., அலுவலக முதல் தளத்திற்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், டி.இ.ஓ., அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.இதனால் அங்கிருந்த சி.இ.ஓ., அலுவலகம், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X