சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.எம்., நிறுவனம் மூலம் ரூ.60 கோடி மோசடி; இருவர் கைது

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
கோவை : கோவையில், 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம்., நிறுவனர், அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் எம்.எல்.எம்., நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர்களான மணிகண்டன், அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, 100
எம்.எல்.எம்., நிறுவனம் மூலம் ரூ.60 கோடி மோசடி; இருவர் கைது

கோவை : கோவையில், 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம்., நிறுவனர், அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் எம்.எல்.எம்., நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர்களான மணிகண்டன், அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, 100 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தனர். துவக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு வட்டிப் பணத்தை வழங்கிய நிறுவனம், கடந்த மே மாதம் முதல் பணம் தரவில்லை.

இதுகுறித்து முதலீட்டாளர்கள் கேட்டபோது, காலம் தாழ்த்தியதுடன் முறையான பதில் தெரிவிக்கவில்லை. நேற்று காலை நிறுவனத்தின் உரிமையாளர் இல்லத்தை, 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர், 60 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் நிறுவனத்தில் முதலீடு செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X