பொது செய்தி

தமிழ்நாடு

குற்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி காவல் துறை சார்பில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை உட்பட நகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறை முடிவு செய்தது.அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்போது, கொரோனா பேரிடர் காலத்தில் விலை உயர்ந்த நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தாங்கள் எடுத்தும் வரும் கை பையினை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் போன்களை அதிகளவில் பயன்படுத்தக்கூடாது.தெரியாத நபர்களுக்கு வாகனங்களில் லிப்ட் கொடுக்கக் கூடாது. தேவையான பணத்தை விட அதிகமாக வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம். வெளியே செல்லும் போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X