பஞ்சரான குளத்து மேட்டு தெரு சாலை| Dinamalar

பஞ்சரான குளத்து மேட்டு தெரு சாலை

Added : ஜூலை 29, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி குளத்து மேட்டு தெரு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட், பஸ் நிலைய பகுதிகளுக்கு கடைவீதி, பெருமாள் கோவில் தெரு, கவரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய தெருவாக குளத்து மேட்டு தெரு உள்ளது. ஏராளமான வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், அரசு பள்ளி உள்ள இந்த தெரு மிக அதிகளவிலான வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது.இருப்பினும் கடந்த ஓராண்டாக இந்த தெருவில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் இவ்வழியாக வாகனங்களில் செல்வது என்பது சாகச பயணம்தான்.எனவே நகரின் மையப்பகுதியில் பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சாலை பள்ளங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X