பொது செய்தி

தமிழ்நாடு

சாலை அகலப்படுத்தும் பணி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ரோடுமாமந்துார் - அரசு மருத்துவக்கல்லுாரி வரையிலான சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் ஏற்கனவே அரசு கல்லுாரி இருந்த இடத்தில், தற்போது மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிக்கு தேவையான மணல், செங்கல், சிமென்ட், கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தளவாட பொருட்கள் கனரக வாகனங்கள் மூலம் இச்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது.குறுகிய சாலையாக இருந்ததால் சங்கராபுரம் சாலையில் உள்ள ரோடுமாமந்துார் சந்திப்பிலிருந்து அரசு மருத்துவக் கல்லுாரி வரையிலான 3 கி.மீ., தொலைவிற்கு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி 100 அடி சாலையாக மாற்றும் பணிகள் சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், சாலை அகலப்படுத்தும் பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டுள்ளது.விரிவாக்க பணிகளுக்கு சாலையோரம் கொட்டப்பட்டுள்ள சிறிய ஜல்லிகள் சாலையில் சிதறிக் கிடப்பதால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.எனவே, மருத்துவக் கல்லுாரி வரையிலான சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X