பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி

Added : ஜூலை 29, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று பொதுமக்கள் பயனடையுமாறு கலெக்டர் கிரண் குராலா கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.பொதுகால கடன் திட்டம் அல்லது தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் 5 சதவீத ஆண்டு வட்டியில், 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வரையும், குழு ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி 4 சதவீதம். சுய உதவிக்குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.இரண்டு கறவை மாடுகள் வாங்க, 6 சதவீத ஆண்டு வட்டியில் 60 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X