பொது செய்தி

தமிழ்நாடு

2,500 டன் ரேஷன் அரிசி சின்னசேலம் வந்தது

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சின்னசேலம்; தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலிருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் 19வது முறையாக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது.கொரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் விநியோகிக்க 51 ஆயிரம் மூட்டைகளில் 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று காலை சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.பின்னர், ரேஷன் அரிசி மூட்டைகள் வந்த 42 ரயில் பெட்டிகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்த பின்னர், லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு மேற்பார்வையில், இந்திய உணவுக்கழக மேலாளர் வெங்கடாசலம், உதவியாளர் திருநீலகண்டன், குமார் ஆகியோர் மூட்டைகளை ஆய்வு செய்தனர். கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் நேற்று வரை 52 ஆயிரத்து 91 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இதுவரை வந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X