பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில்தம்பதி கோரிக்கை மனு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விழுப்புரம்; நிலத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தம்பதியர் மனு கொடுத்தனர்.விழுப்புரம் அடுத்த தளவானுார் தொட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 74; இவர் தனது மனைவி கஸ்துாரி, 69; என்பவருடன் கொடுத்துள்ள மனு;எங்களுக்கு சங்கர், சரவணன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் சொந்தமாக வீடு மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் நிலம் மற்றும் வீடுகளை மகன்கள் பெற்று கொண்டு சரியாக உணவு வழங்கவில்லை. மூத்த மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அரசு துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டனர். கொரோனா ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து நான்கு மாதங்களாக கண்டமானடி கோவிலில் தங்கியுள்ளோம். உணவு மற்றும் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றோம்.எனவே, நிலத்தை மீட்டுத்தரவும், மகன் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X