பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விழுப்புரம்; கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார், வல்லம் மற்றும் விக்கிரவாண்டி வட்டாரங்களை சேர்ந்த 322 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த ஆறு வட்டாரங்களில் கொரோனா முழு முடக்கத்தால் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்டகால கடனாக வழங்கப்படும்.இந்நிதியை பெற புலம் பெயர்ந்து திரும்பிய 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம். எண்.365 இந்திரா காந்தி சாலை, ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபம் ரோடு, சுதாகர் நகர், விழுப்புரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரிலும், 04146 290207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X