பொது செய்தி

தமிழ்நாடு

அறக்கட்டளை மூலம் சுடுகாடு சீரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் நகராட்சி சுடுகாட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை, கலெக்டர் பார்வையிட்டார்.திண்டிவனம் சலவாதி ரோட்டில், நகராட்சி சுடுகாடு அமைந்துள்ளது. போதுமான பராமரிப்பின்றி கிடந்த சுடுகாடு, நகராட்சி மற்றும் தனியார் அமைப்பு மூலம் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வந்தனர்.இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிதி ஒதுக்கீட்டின் மூலம், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. மேலும், அமைச்சர் சண்முகத்தின் அறிவுரையின் பேரில், சுடுகாட்டை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றது.சுடுகாடு சீரமைக்கும் பணிக்காக திண்டிவனம் தொண்டு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.80 லட்சம் செலவில், பூங்கா அமைத்தல், பேவர் பிளாக் சாலை , நவீன கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது.இப்பணிகளை கலெக்டர் அண்ணாதுரை, நேற்று ஆய்வு செய்தார். சுடுகாட்டை சுற்றி நடைபெற்று வரும் பணிகள் குறித்து, அறக்கட்டளை தலைவர் வெங்கடேசனிடம் கேட்டறிந்தார்.ஆய்வின் போது, சப்கலெக்டர் அனு, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், பொறியாளர் பவுல்செல்வம், அறக்கட்டளை கவுர தலைவர் ரங்கமன்னார், நிர்வாகிகள் ஓவியர் தேவ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், ராம்லால்ரமேஷ், பாலாஜிவெங்கடேசன், கார்த்தி, ஆனந்த்,கோதைபாலாஜி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X