பொது செய்தி

தமிழ்நாடு

இரு கிராமங்களில் மருத்துவ முகாம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பில்ராம்பட்டு,வீரங்கிபுரம் ஊராட்சிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் அடுத்த பில்ராம்பட்டு மற்றும் வீரங்கிபுரம் ஆகிய கிராமங்களில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இரு கிராமங்களில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவர் சுகுமாறன் தலைமை தாங்கினார்.டாக்டர்கள் பாஸ்கர்,ஜோஸ்பிரேம்குமார்,காயத்திரிதேவி ஆகியோர் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இரண்டு மருத்துவ முகாம்களிலும் 250 நபர்களுக்கு பொதுமருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.அப்பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன் மேற்பார்வையில் இரண்டு கிராமங்களிலும் 35 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.இதில் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார செவிலியர்கள் ராணி,மாலதி,கமலா ஆகியோர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X