சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விஷப்பயிர்களை களைவது எப்போது?

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 விஷப்பயிர்களை களைவது எப்போது?

அ.வனிதா, ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், கடவுள் மறுப்பு இயக்கம் மற்றும் நாத்திகம் என்ற பெயரில், சில அமைப்பினர் செய்யும் வரம்பு மீறிய செயல்கள், ஹிந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்துகின்றன. மேலும் அந்த கும்பல், தேசத்தையும் அவமதிக்கிறது.

இத்தகைய அமைப்புகள், அன்னிய நாட்டு தீய சக்திகளுக்கு விலை போய் விட்டன என்று நினைக்கும் வகையில், அவற்றின் செயல்பாடுகள் உள்ளன.நம் நாட்டில், 80 சதவீதம், ஹிந்துக்களும்; மீதம், 20 சதவீதம், பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் ஒன்றிணைந்து, அமைதியாக வாழ்ந்து வருவதால் தான், இந்தியா, மதசார்பற்ற நாடாக, உலக அரங்கில் போற்றப்படுகிறது.

ஹிந்துக்களின் சகோதரத்துவமே, இந்தியா, மதசார்ப்பற்ற நாடாக விளங்குவதற்கு முக்கிய காரணம் என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களை சீண்டுவதன் மூலம், தேசத்தின் ஒற்றுமைக்கு, பாதிப்பு ஏற்படுத்த, சில அமைப்புகள் முயற்சிக்கின்றன.

இந்தியாவின் பெருமையை குலைக்கும் வகையில், அன்னிய தீய சக்திகளுக்கு, இங்குள்ள சில அமைப்புகள் விலை போய் உள்ளன. அதனால் தான், அந்த அமைப்புகள், ஹிந்துக்களை விஷமத்தனமாக, வரம்பு மீறி விமர்சித்து வருகின்றன. இது, நல்லதல்ல; மிகவும் கண்டனத்திற்குரியது.அந்த விஷம அமைப்பின் உறுப்பினர்கள், ஹிந்துக்களை மட்டும் விமர்சனம் செய்கின்றனர். ஜாதி பிரச்னையை துாண்டி, அதில் அரசியல் லாபம் அடைகின்றனர்.

இந்நாட்டில், ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்; நாடு, வளர்ச்சியின் பாதையில் செல்வதை தடுக்க வேண்டும் என்பது தான், அவர்களின் நோக்கம். ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, தேசத்திற்கு எதிராகவும், அந்த அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. சமூக வலைதளங்களில், அந்த அமைப்புகள் தீவிரமாக இயங்கி, இளைய தலைமுறையிடம் தவறாக, விஷ கருத்துகளைப் பரப்பி வருகின்றன.

'இந்தியா என்பது, ஒரு நாடே கிடையாது' என்றும், லடாக் பிரச்னையில், சீனாவிற்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த அமைப்புகள் மீது, தேச துரோக நடவடிக்கை பாய வேண்டும்.இந்த விஷப் பயிர்களை களையெடுக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், 'இந்தியா மதசார்பற்ற நாடு' என்ற அங்கீகாரத்தை, இழக்க வேண்டியதிருக்கும்.

***


வளர்ச்சிக்கானவிதை நேரு போட்டது!


ராஜ்வாசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த,- 1962ல், சீனாவிற்கு எதிராக நடந்த யுத்தத்தில், இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு, அப்போதைய பிரதமர், ஜவகர்லால் நேரு சரியாக செயல்படவில்லை; ராணுவத்தை பலப்படுத்தவில்லை என்ற, தவறான கருத்துக்கள், மக்களிடையே திணிக்கப்பட்டன.

அப்போதைய நாட்டின் நிலையை தெரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக கருத்துக்களை தெரிவிப்பது, முற்றிலும் தவறானது.சுதந்திரத்திற்கு பின், நாட்டின் முன் இருந்த முக்கிய பிரச்னைகள்- சரியான அரசியலமைப்பு, வறுமை, வேலையின்மை ஆகியவையே. ஆக, 10 ஆண்டுகளுக்கு மேலாக, 1960 வரையில், இந்த முக்கிய அம்சங்களுக்கான திட்டங்களுக்கு தான், அப்போதைய பிரதமர் நேருவால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நேரு, பிரதமராக இருந்த காலத்தில் தான், உலகிலேயே சிறந்ததான, அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. பல சிரமங்களுக்கு இடையேயும், மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; ஜனநாயக முறைப்படி நாடெங்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இவை, இமாலய சாதனையாகும்!ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு, சரியாக செயல்படுத்தப்பட்டு, பல துறைகளிலும், நம்நாடு முன்னேற்றம் கண்டது.

ஏராளமான அணைகள், பாசன வசதிகள், மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ராணுவத்தை பலப்படுத்துதல் முக்கியம் தான். ஆனால், அன்றைய காலகட்டத்தில், பொருளாதாரம் வளர்ச்சியடையாத நிலையில், உள்நாட்டு வளர்ச்சிக்கு தான், முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கொள்கையில், தீவிரமாக இருந்தார், நேரு. அது தவறென்று, எப்படி சொல்ல முடியும்?

அன்று, அவர் எடுத்த முடிவின் காரணமாக தான், இன்றைக்கு -விவசாயம், தொழில் உற்பத்தி, அறிவியல் வளர்ச்சி மற்றும் மருத்துவம் ஆகிய எல்லாவற்றிலும், உலகளவில், இந்தியா முன்னிலையில் நிற்கிறது.ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இரண்டு அம்சங்களை உடையது. ஒன்று-, ராணுவத்தை பலப்படுத்துவது; இரண்டாவது-, அண்டை நாடுகளுடன் நட்புறவு சார்ந்தது. நேரு, பிற நாடுகளுடன் நல்லுறவு என்ற, நல்ல வழியை தேர்ந்தெடுத்தார்.

இதற்காக, ராணுவத்தை பலப்படுத்த, நேருவுக்கு விருப்பமில்லை என, குற்றம் சாட்டக் கூடாது. அன்றைய காலகட்டத்தில், மோசமான நிதிநிலை காரணமாக, ராணுவத்தை பலப்படுத்த, தேவைப்படும் அதிக அளவு நிதியை ஒதுக்க முடியாத நிலை இருந்தது; அது தான் உண்மை.இதை எதிர்கொள்ள தான், நேரு, 'பஞ்ச சீல கொள்கைகள்' அறிவித்தார்; இதற்கு, உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது. சீனா, பஞ்ச சீல கொள்கையை ஏற்றுக்கொள்வது போல் நடித்து, நம் முதுகில் குத்தியது.

சீனா செய்த நம்பிக்கை துரோகம் தான், தவறு. சீனா மீது, நேரு கொண்டிருந்த நல்ல நம்பிக்கையை, தவறென்று சொல்வது, சரியல்ல.நேரு காலத்தில் தான், ராணுவத்தை பலப்படுத்த, பல அடிப்படை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பாகிஸ்தான் பயன்படுத்திய, அமெரிக்காவின், 'பேட்டன்' டாங்கிகளுக்கு இணையான, 'விஜயந்தா' டாங்கிகள், சென்னை, ஆவடியில் தயாரிக்கப்பட்டன.

ராணுவம் என்பது, ஒரு வலுவான அமைப்பு. அதை சரியான வழியில் கையாண்டு, கட்டுப்பாடுடன் வைத்திருத்தல், மிகவும் அவசியமான ஒன்று; அதை, நேரு மிக சரியாக செய்தார். ராணுவத்தை அவ்வாறு வைக்கத் தவறியதன் தீய விளைவுகளை, அண்டை நாடான பாகிஸ்தானில், நாம் பார்க்கிறோம்.இப்போதைய ஆட்சியாளர்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக, இதற்கு முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறுவதோ, அவர்களை அவமதிப்பதோ ஏற்கத்தக்கதல்ல.இந்தியா இன்று, எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இருப்பதற்கு, அன்று, நேரு காலத்தில் போடப்பட்ட அஸ்திவாரம் தான் காரணம்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
30-ஜூலை-202017:52:08 IST Report Abuse
T.S.SUDARSAN வனிதா அண்ட் ராஜவாஸன் நீங்கள் நல்லதோர் தீர்வை கூறியுள்ளீர்கள் . அனால் இப்போது உள்ள கொங்கிரஸ் ,தி முக திரிந்ததது . இவர்கள் சீனா பாகிஸ்தானிமிடம் கடன்பட்டவர்கள். எப்போதும் பிரிவினை பார்தி பேசி கொண்டேயிருப்பார்கள்.
Rate this:
Cancel
prem TRUTH - Madurai ,இந்தியா
30-ஜூலை-202010:59:28 IST Report Abuse
prem  TRUTH திரு ராஜவாஸன் அவங்களுக்கு.... நேரு குடும்பம் எப்படிப்பட்டது, நேரு என்பவர் படேல் , நேதாஜி போன்றவர்களை எப்படி அவமதித்தார், காந்தியிடம் இருந்த மக்கள் செல்வாக்கை எப்படி அபகரித்து, அவரின் குடும்பத்தை விலக்கி வைத்து தனது குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி இன்று நாடு எதிர்கொள்கிற அத்தனை பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமாக இருந்தார் என்றும் தனது குடும்பத்தை மட்டும் அதிகாரத்தில் நிறுத்தி வைத்து பல லட்சம் கோடி சொத்துக்களை இந்தியரிடம் இருந்து அபகரித்து வெளிநாட்டுக்காரி எல்லாம் இந்தியாவில் மதமாற்றம் செய்ய எவ்வளவு அடித்தளம் போட்டு வைத்தார் என்பதை தெரிந்திருந்தும் பாவம், வயிறு வளர்க்க இழிசெயல் செய்யும் காங்கிரஸ் குண்டராக மாறியது ஆச்சரியம் இல்லை எங்களுக்கு, அனால் ஒன்று நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஆம்மாம் சாமி போட பழைய படிப்பறிவில்லாத இந்தியர் இல்லை... நவீன நல்லது, கேட்டதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்கும் உண்மையின் பக்கம் நிற்கும் தேசபக்தி நிறைந்த இந்தியர் என்பதை புரிந்து கொண்டு அரைவேக்காட்டு தனமான கருத்துக்களை பொதுமேடையில் வைக்கும் பொது கொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்திப்பது தங்களுக்கு நல்லது என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன்...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
30-ஜூலை-202009:34:41 IST Report Abuse
Darmavan neruthaan ellavatrukkum kaaranam.nam naatti namakku pin suthanthirm adaitha naadugalodu oppttal naam migavum pin thangiye ulloom.paathukaappu saathanagal innum irakkumathi athuvum miga siriya naadukalidam irunthu enbathe kevalam. naarttin ellaiyai paathukaakka mudiyaathavan aala thaguthi atravan.innum eelmai naattai vittu pogavillai.kaaranam neruvin kolgaiye.valarnthathu konjame sarasari kooda illai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X