பொது செய்தி

தமிழ்நாடு

தெருக்கூத்து கலைஞர்கள் கலெக்டருக்கு மனு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விழுப்புரம்; சமூக இடைவெளியோடு தெருக்கூத்து நடத்துவதற்கு அனுமதி கோரி, தமிழர் தெருக்கூத்து கலைஞர்கள் மாநில இயக்க நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இயக்க மாநில தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நிர்வாகிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,விழுப்புரம் மாவட்டத்தில், தெருக்கூத்து கலையை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். ஓராண்டில், நுாறு நாட்களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, ஆண்டுதோறும் குடும்ப செலவு மற்றும் பிள்ளைகள் படிப்பு உள்ளிட்ட செலவுகள் செய்கின்றோம்.கொரோனா ஊரடங்கால் தெருக்கூத்து தொழில் முற்றிலும் பாதித்து, கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். ஆடி மற்றும் ஆவணி மாதத்தில், சமூக இடைவெளியோடு நாங்கள் தெருக்கூத்து நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். நிவாரண நிதி கிடைக்காத நலவாரிய உறுப்பினர்களுக்கு, நிவாரணத் தொகை கிடைக்கவும், மழைக்கால நிவாரண நிதியையும் கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் தெருக்கூத்து கலைஞர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X