சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறை மீறல் விழுப்புரத்தில் 2 கடைக்கு 'சீல்'

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரத்தில், கொரோனா ஊரடங்கு விதிமுறை கடைபிடிக்காத இரண்டு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடைகளில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். . இதையொட்டி, நேற்று வருவாய் அலுவலர் மரியலுாயிஸ் பிரபாகரன், நகர்நல அலுவலர் ஜெயவேல், உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம் உட்பட நகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுவினர், விழுப்புரம் காமராஜர் வீதி, எம்.ஜி., ரோட்டில் ஆய்வு செய்தனர். அங்கு ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் பாத்திரக் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்றது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X