சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., பணியை தடுத்தஆசாமி மீது வழக்கு பதிவு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விழுப்புரம்; கோட்டக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு பணியில் இருந்த வி.ஏ.ஓ.,வை தடுத்த, ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கோட்டக்குப்பம் வி.ஏ.ஓ.,வாக தீனதயாளன் உள்ளார். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள பழைய பட்டினபாதை சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த, அப்பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர், பணி செய்யக்கூடாது என தடுத்து, தனது உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி கொண்டு மிரட்டினார். இதையடுத்து, வி.ஏ.ஓ., தீனதயாளன் கொடுத்த புகாரை யொட்டி, கோட்டக்குப்பம் போலீசார் கார்த்தி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X