பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் கலெக்டர், எஸ்.பி., திடீர் ஆய்வு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

செஞ்சி; செஞ்சியில் காய்கறி கடைகளை ஒரே இடத்தில் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.செஞ்சியில் நேற்று மாலை கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், சப் கலெக்டர் டாக்டர் அனு, டி.எஸ்.பி., ராஜன், தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி, பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், அறவாழி, செயல் அலுவலர் தெய்வீகன் ஆகியோர் பங்கேற்றனர்.பின் கடைவீதியில் ஆய்வு செய்து, கூட்டநெரிசலை தவிர்க்க காய்கறி கடைகள் அனைத்தையும் பஸ் நிலைய தெற்கு பகுதியில் ஒரே இடத்தில் நடத்தவும்,கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்களை பஸ்நிலையத்தின் வடக்கு பக்கத்தில் நிறுத்தவும் செயல் அலுவலர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, திண்டிவனம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி, விழுப்புரம் ரோட்டில் உள்ள சர்ச்ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். திருவண்ணாமலை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதன் மூலம் செஞ்சியில் அடுத்து வரும் நாட்களில் கடை வீதியில் நெரிசல் குறைவதற்கானவாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X