இந்தியா

வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைக்க கோரிக்கை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருக்கனுார்; சோரப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் சேதமடைந்து, மேல்தள காரைகள் இடிந்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, வம்புப்பட்டு, விநாயகம்பட்டு, சோரப்பட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு, குடியுரிமை, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் அரசின் நலத்திட உதவிகளுக்கு தேவையான சான்றிதழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில், சோரப்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தின் மேல்தளக் காரைகள், கதவு, ஜன்னல் உள்ளிட்டவை தற்போது மிகவும் சேதமடைந்து, இடிந்து விழுந்து வருகிறது.மேலும், இந்த அலுவலகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால், சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலகம் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள சோரப்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க, வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X