இந்தியா

திருக்கனூரில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 திருக்கனூரில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

திருக்கனுார்; திருக்கனுார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கனுார் கட்டுகரை பகுதி மற்றும் திருமங்கலம் ஏரிக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக, நிலத்தடி நீரை விவசாயிகள் முழுமையாக நம்பியுள்ளனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் 70 அடியில் இருந்து 130 அடிக்கு கீழே சென்று விட்டது.

இதனால், நிலத்தடி நீரை நம்பி நெல் சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, எப்பொழுதும் பச்சை பசேல் என காணப்பட்ட அப்பகுதி விவசாய நிலங்கள் தற்போது, தண்ணீர் இன்றி வறண்டு போய், ஆடு மாடுகள் மேய்ச்சல் இடமாக மாறியுள்ளது.இனிவரும் காலங்களில் நல்ல மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.இல்லையெனில், புதிய போர்வெல் அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆகையால், புதிதாக போர்வெல் அமைக்க, அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, விவசாயி செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் ஆண்டுமுழுவதும் நெல், கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இங்கு, 70 அடியில் இருந்த நீர்மட்டம், போதிய மழை இல்லாததால், படிப்படியாக குறைந்து 130 அடிக்கு கீழே சென்று விட்டது.இதனால், பழைய போர்வெல்களில் தண்ணீர் வரவில்லை.

இதன் காரணமாக, நிலத்தடி நீரை நம்பி இருந்த எங்களால், இந்தாண்டிற்கான சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அரசு திருக்கனுாரை வறட்சி பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஏற்றப்படி புதிதாக போர்வெல் அமைக்க மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X