சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

டி.ஐ.ஜி.,யாக இருந்து எஸ்.ஐ., ஆன நத்தம்!

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 டி.ஐ.ஜி.,யாக இருந்து எஸ்.ஐ., ஆன நத்தம்!

''பறிமுதல் செஞ்ச பைக்குகளை, பணம் வாங்கிட்டு குடுத்துட்டாரு பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருச்சி, துறையூர் பக்கம், செல்லிபாளையம் கிராமத்துல, சூதாட்டத்துல ஈடுபட்ட, 11 பேரை, போன, 25ம் தேதி கைது பண்ணி, ஜாமின்ல விடுவிச்சாங்க... அவங்களிடம் இருந்து, ஆறு பைக்குகளை பறிமுதல் செஞ்சாங்க பா...

''துறையூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த இந்த பைக்குகளுக்கு, தலா, 5,000 ரூபாய் வாங்கிட்டு, அங்கே பணியில இருந்த ஒருத்தர், மறுநாளே திருப்பிக் குடுத்துட்டாரு... இது சம்பந்தமா, எஸ்.பி.,க்கு புகார் போய், முசிறி டி.எஸ்.பி., விசாரணை நடத்துனாருங்க...

''சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார்னு, பலரிடம் விசாரணை நடத்தி, எஸ்.பி.,க்கு அறிக்கை குடுத்திருக்காரு பா... ''சீக்கிரமே மோசடி போலீஸ் மேல நடவடிக்கை வரும்னு பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''துரை, இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு நகர்ந்து இடம் தந்த அந்தோணிசாமியே, ''டி.ஐ.ஜி.,யா இருந்தவர், எஸ்.ஐ., ஆன மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்றாங்க...'' என, சிரித்தபடியே அடுத்த தகவலை ஆரம்பித்தார்.

''போலீஸ் தகவலா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''இல்லை... அ.தி.மு.க.,வுல, சமீபத்துல மாவட்ட செயலர்கள், அமைப்பு செயலர் பதவிகளுக்கு நிறைய பேரை நியமிச்சிருக்காங்களே... இதுல, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலரா, 'மாஜி' அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை போட்டிருக்காங்க...

''இவர், கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்ட, 11 பேர் அடங்கிய வழிகாட்டு குழுவுல இருக்கார்... இந்த கமிட்டியின் கீழ் செயல்பட வேண்டிய மாவட்ட நிர்வாகத்துக்கு, அவரையே செயலரா நியமிச்சது கேலிக்கூத்துன்னு சொல்றாங்க... ''இதுக்கு மத்தியில, வழிகாட்டுக் குழு, செயல்படாம முடங்கி கிடக்கிறது தனிக்கதை...

''அதே மாதிரி, இந்த நியமனங்கள்ல, முதல்வர், துணை முதல்வர் சார்ந்த சமுதாயத்தினருக்கு தான் அதிக வாய்ப்பு கிடைச்சிருக்கு... ''தென் மாவட்டங்கள்ல, அதிகமா இருக்கிற நாடார், யாதவர், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கு எந்த வாய்ப்பும் இல்லைன்னும், முணுமுணுப்பு கிளம்பியிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''இந்தப் பதவிகள் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தப்ப, திருவள்ளூர் மாவட்டத்துல, மாதவரம் மூர்த்தி, ரமணாவுக்கு அமைச்சர், மாவட்ட செயலர் பதவிகளை குடுத்து, அழகு பார்த்தாங்க... இதுல, கலப்பட பால் விவகாரத்துல சிக்கி மூர்த்தியும், குட்கா விவகாரத்துல, ரமணாவும் பதவிகளை இழந்துட்டாவ வே...

''ஜெயலலிதா இருந்த வரைக்கும், ரெண்டு பேருக்கும் எந்தப் பதவியும் தரலை... தேர்தல்ல சீட்டும் குடுக்கலை... ''இப்ப, இவங்க ரெண்டு பேருக்கும் மாவட்ட செயலர் பதவிகளை, முதல்வரும், துணை முதல்வரும் வாரி குடுத்திருக்காவ... இதுவும், ஜெ., விசுவாசிகள் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஜூலை-202006:27:32 IST Report Abuse
D.Ambujavalli ஜெ பெயரை சும்மா ஒப்புக்கு சொல்வதால், அவர் ஒதுக்கியவர்களுடன் உறவாடக்கூடாதா ? அந்த காவலர் வாங்கியதில் கணிசமாகப் ‘பங்கு’ கொடுத்திருந்தால் எந்த நடவடிக்கையும் இருந்திருக்காதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X