இந்தியா

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: பா.ஜ., வலியுறுத்தல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்காலில் உள்ள அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.காரைக்கால் மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், பாரதியார் சாலையில் உள்ள நேஷனல் மகாலில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் அருள்முருகன், நளினி கணேஷ்பாபு, செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொதுச் செயலர் மோகன்குமார், செயலர் சகுந்தலா, மகளிரணி தலைவி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தனியார் துறைமுகத்தில் உள்ளூரை சேர்ந்த படித்த, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.மண்டல இட ஒதுக்கீடு பெறுவதற்கு புதிதாக பெறப்பட்ட நிரந்தர சான்றிதழ் வேண்டும் என அதிகாரிகள் கூறுவதால், மாணவர்கள், பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர். கடந்தாண்டு பெறப்பட்ட குடியிருப்பு சான்றிதழை கொண்டு மண்டல இட ஒதுக்கீடு சான்றிதழ் வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலமாக அரிசியை வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X