சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அரசு அதிகாரிகள் மாறவேயில்லை!

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அரசு அதிகாரிகள் மாறவேயில்லை!

'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டத்தில், சமீபத்தில் ஆய்வு செய்தார்.

அவர், காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட பின், அரசு மருத்துவமனைக்கு செல்வார் என, செய்தித் துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை ஆய்வுக்குப் பின், தொழிற்சாலைக்கு செல்வதாக, மறு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் நிருபர்கள், மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கிருந்து, கலெக்டர் அலுவலகம் செல்வார் என, தெரிவிக்கப்பட்டது.உடனே, பத்திரிகையாளர்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் சுகாதார செயலர், காக்களூர் தொழிற்பேட்டைக்கு சென்றார். அங்கு நின்றிருந்த சில நிருபர்களுக்கு மட்டும் பேட்டி அளித்த பின், கலெக்டர் அலுவலகம் சென்றார்.

மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 'அரசு அதிகாரிகள் என்றாலே, அலைக்கழிக்கிறது தானோ...' என, நொந்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஜூலை-202006:23:34 IST Report Abuse
D.Ambujavalli கோப்புகளை ‘சுத்தி விடுவது ‘ போல நிருபர்களை சுத்தலில் விட்டிருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X