தொழிலாளி தாக்கு 4 பேருக்கு வலை | Dinamalar

இந்தியா

தொழிலாளி தாக்கு 4 பேருக்கு வலை

Added : ஜூலை 29, 2020
Share

திருக்கனுார்; வீடு புகுந்து தொழிலாளியை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.திருக்கனுார் அடுத்த வாதானுார் பாட்டை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலி தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் தனது மனைவி வெண்ணிலாவுடன் இருந்தார். அப்போது, அதேப்பகுதியை சேர்ந்த சபரிலிங்கம் உள்ளிட்ட ௪ பேர், வீடு புகுந்து ராஜேந்திரனை தாக்கினர்.அதனைக் கண்டு வெண்ணிலா கூச்சலிடவே நான்கு பேரும் தப்பியோடினர். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து சபரிலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X