இந்தியா

இட ஒதுக்கீடு உரிமையை பெற வேண்டும்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஓ.பி.சி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கிடைத்திட புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:மாநில அரசுகளால் அகில இந்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உரிமை கேட்டு இந்திய கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒருமித்தக்குரலில் தொடர்ந்த வழக்கில், இட ஒதுக்கீடை அமல்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை புதுச்சேரி அரசு கொடுக்க வேண்டும். சென்னை ஐகோர்ட் அளித்துள்ள இந்த தீர்ப்பினை எதிர்த்து எந்த விதமான மேல் முறையீடும் செய்வதற்கு மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கக்கூடாது. புதுச்சேரி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட் கேவியட் மனு தாக்கல் செய்யவேண்டும்.புதுச்சேரி அரசு தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கலலுாரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கும் சட்டத்தை இயற்றும் பொழுது நிகர் பல்கலைக்கழகங்களிலும் கூட 50 சதவீத இடங்கள் பெறுகின்ற வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.மேலும் புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு தமிழகத்தை போல் இட ஒதுக்கீடு வழங்க 69 சதவீத இட ஒதுக்கீடு உரிமை சட்டத்தை காலத்தின் தேவை கருதி புதுச்சேரி சட்டசபை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X