இந்தியா

டைல்ஸ் தொழிற்சாலையில் ஒடிசா வாலிபர் மர்ம சாவு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

காரைக்கால்; டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஒடிசா மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருநள்ளாறு இளையான்குடி பகுதியில் உள்ள தனியார் டைல்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால், வெளிமாநில தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது. ஒருசில வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த குறைந்த தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்நிலையில், இங்கு வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் செல்வகுமார் மாலிக்,30; என்பவர் நேற்று தொழிற்சாலைக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால், சக தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. தொழிற்சாலை நிர்வாகமோ, செல்வகுமார் மாலிக் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறியது.தகவலறிந்த திருநள்ளாறு போலீசார் விரைந்து சென்று செல்வகுமார் மாலிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகறித்து வழக்கு பதிந்து, செல்வகுமார் மாலிக் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X