பொது செய்தி

இந்தியா

15.30 லட்சத்தை கடந்த பாதிப்பு 9.88 லட்சம் பேர் மீண்டனர்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில் நேற்று, 48 ஆயிரத்து, 513 பேரிடம், கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், ஒட்டுமொத்த பாதிப்பின் எண்ணிக்கை, 15.30 லட்சத்தை கடந்து உள்ளது.

இவர்களில், 9.88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர்.64.51 சதவீதம்இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின், நேற்றைய அறிக்கை:நாடு முழுதும், கொரோனா வைரசிற்கான பரிசோதனைகளை, மத்திய, மாநில அரசுகள் அதிகரித்துள்ளன. இதுவரை, 1.77 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதன்படி நேற்று, 4.09 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், 48 ஆயிரத்து, 513 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் நாட்டில், 14 லட்சத்தை கடந்திருந்த பாதிப்பின் எண்ணிக்கை, இரு நாட்களில், 15 லட்சத்து, 31 ஆயிரத்து, 669 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுவரை, 9.88 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, மீட்பு விகிதம், 64.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், மஹா.,வில், 282 பேர்; கர்நாடகாவில், 102; தமிழகத்தில், 88; ஆந்திராவில், 58; உ.பி.,யில், 41; மேற்கு வங்கத்தில், 38; டில்லியில், 28; குஜராத்தில், 24 பேர் உள்ளிட்ட, 768 பேர் இறந்துள்ளனர்.

மஹா., முதலிடம்இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 34 ஆயிரத்து, 193 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த இறப்பிலும், 14 ஆயிரத்து, 165 பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது. அடுத்ததாக, டில்லியில், 3,881; தமிழகத்தில், 3,659; குஜராத்தில், 2,372; கர்நாடகாவில், 2,055; உ.பி.,யில், 1,497 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X