ஜார்க்கண்டில் கொரோனா மீட்பு விகிதம் 41.66 சதவீதமாக உயர்வு

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ராஞ்சி : ஜார்க்கண்டில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 179 பேர் குணமடைந்து உள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்டில் நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மாநில அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 686 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,563 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,495 ஆக அதிகரித்தது.


latest tamil news



ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 179 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,984 ஆக அதிகரித்தது. மாநிலத்தின் இறப்பு விகிதம் 0.98 சதவீதமாக குறைந்துள்ளது. ஜார்க்கண்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் 41.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X