பொது செய்தி

தமிழ்நாடு

தனித்த சித்தா சிகிச்சையில், 2,000 பேர் நலம் பலன் தரும் மருந்துகளின் விபரம் வெளியீடு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை : சென்னையில், தனித்த சித்தா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோரில், இதுவரை, 2,020 பேர் சிகிச்சை முடிந்து, நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சைக்கு எந்த மாதிரியான சித்த மருந்துகள் கைகொடுத்தன என்ற விபரத்தை, சித்தா டாக்டர் வீரபாபு வெளியிட்டுள்ளார்.குணமடைதல்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, அலோபதியுடன், சித்தா, ஆயுர்வேதம் ஆகிய கூட்டு சிகிச்சை அளிக்க, அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, தனித்த சித்தா சிகிச்சை மையத்தை, சென்னை மாநகராட்சி துவக்கியது.சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, ஜவஹர் பொறியியல் கல்லுாரியில், ஜூன், 3ல், தனித்த சித்தா சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.

இந்த மையத்தில், சித்தா டாக்டர் வீரபாபு தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.சமீபத்தில் சுவாச பாதிப்பு உள்ளிட்டோரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு, ஆக்சிஜன் அளவு, 82 ஆக குறைந்த கொரோனா நோயாளிகள் உட்பட, நேற்று வரை, 2,020 பேர் நலம்பெற்று வீடு திரும்பிஉள்ளனர்.நோயாளிகள் விரைந்து குணமடைதல், உயிரிழப்புகள் இல்லாதது போன்ற காரணங்களால், சென்னை மட்டுமின்றி, பிற மாவட்ட நோயாளிகளும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அதன்படி, மொத்தமுள்ள, 465 படுக்கைகளும் நிரம்பி வருகின்றன. சிகிச்சைக்கு பலன் அளிக்கும் மருந்துகள் குறித்த விபரங்களும், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆலோசனை : இது குறித்து, சித்தா டாக்டர் வீரபாபு கூறியதாவது:தனித்த சித்தா சிகிச்சைக்கு பலர் ஆர்வம் காட்டுகின்றனர். தினமும், 50 பேர் குணமடைந்து வீடு திரும்பினால், அன்றே, 50 பேர் புதிதாக வருகின்றனர். வீட்டில் இருப்பதை போன்ற உணர்வுடன் இருப்பதால், நோயாளிகள் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றனர். கொரோனா தொற்று வராமல் தடுக்க, பொதுமக்கள் தினமும், காலை, மாலை அல்லது ஏதேனும் ஒருவேளையில், நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர், மூலிகை தேனீர் ஆகியவற்றை அருந்தலாம் ஆடாதொடை கஷாயம், கற்பூரவல்லி ரசம், வேப்பம்பூ ரசம், துாதுவளை சூப், கொள்ளுத் துவையல் ஆகிய வற்றையும் உட்கொள்ளலாம்

வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி கள், சித்த டாக்டர்கள் ஆலோசனைப்படி, பிராமாணந்த பைரவ மாத்திரை, மகா வசந்த குசுமார மாத்திரை, வசந்த குசுமார மாத்திரை சாப்பிடலாம் திப்பிலி ரசாயனம், சுவாச குடோரி மாத்திரை, ஆடாதொடை குடிநீர், தாளிசாதி மாத்திரை, மகா சுதர்சன் சூரண மாத்திரை ஆகிய வற்றையும் எடுத்து கொள்ளலாம் இந்த மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் சுயமாக எடுத்து கொள்ளக்கூடாது. சித்தா டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X