பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை : ''தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, பொதுமக்கள் நடந்தால், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே, கொரோனா பரிசோதனை செய்வதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தினசரி, 63 ஆயிரம் பேருக்கு, பரிசோதனை நடத்தப்படுகிறது.மாநில அளவில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 54 ஆயிரத்து, 91 படுக்கைகள்; சிறப்பு மையங்களில், 64 ஆயிரத்து, 903 படுக்கைகள்; ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய, 25 ஆயிரத்து, 538 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் இதுவரை, 24.75 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில், 96 ஆயிரத்து, 438 பேர் உட்பட, 2.27 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பு, 9 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை, 73 சதவீதமாக உள்ளது; சென்னையில், 84.5 சதவீதமாக உள்ளது. மொத்தம், 3,659 பேர் இறந்து உள்ளனர். இறப்பு சதவீதம், 1.6 சதவீதமாக உள்ளது. கலெக்டர்கள் சிறப்பாக பணியாற்றியதால், கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது;

அனைவருக்கும் பாராட்டுகள்.வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கு, அரசு சார்பில் நன்றி.மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், அரசு செய்து கொடுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், 3.50 லட்சம் ஏக்கர், நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை தாண்டி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கால்வாய்களை துார் வாரியதால், கடைமடை வரை தண்ணீர் சென்றுள்ளது. குடிமராமத்து திட்டம், 85 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதி பணிகளும் நிறைவடைந்து, மழை நீரை சேமித்து வைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பருவ மழை துவங்கி உள்ளது. மழை நீரை தேக்கி வைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, மக்கள் முழுஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது தான் கொரோனாவை தடுக்க முடியும்; இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.மருத்துவ குழுவுடன்இன்று ஆலோசனைமுதல்வர் நேற்று, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, பொது ஊரடங்கை தளர்த்துவது, பஸ்களை இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இது தொடர்பாக, இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின், ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X