பொது செய்தி

தமிழ்நாடு

57 ஆயிரம் பேருக்கு தொடருது சிகிச்சை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகம் முழுதும், இதுவரை, 2.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டாலும், தற்போது, 57 ஆயிரத்து, 490 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழகத்தில், 119 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில் நேற்று மட்டும், 60 ஆயிரத்து, 794 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 6,426 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், 1,117 பேர்; செங்கல்பட்டில், 540 பேர்; கோவையில், 259 பேர்; மதுரையில், 225 பேர்; திருவள்ளூரில், 382 பேர்; துாத்துக்குடியில், 316 பேர்; விருதுநகரில், 370 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மார்ச் முதல் நேற்று வரை, 25.36 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், இரண்டு லட்சத்து, 34 ஆயிரத்து, 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில், 97 ஆயிரத்து, 575 பேர்; செங்கல்பட்டில், 13 ஆயிரத்து, 841 பேர்; மதுரையில், 10 ஆயிரத்து, 618 பேர்; திருவள்ளூரில், 13 ஆயிரத்து, 184 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து, 5,927 பேர் மீண்டுள்ளனர். சென்னையில், 82 ஆயிரத்து, 764 பேர் உட்பட, மாநில முழுதும், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 883 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர். தற்போது, 57 ஆயிரத்து, 490 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், நாகையில், 20 வயது, அரியலுாரில், 22 வயது இளம்பெண்கள் உட்பட, 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால், சென்னையில், 2,076 பேர்; செங்கல்பட்டில், 242 பேர்; மதுரையில், 231 பேர்; திருவள்ளூரில், 226 பேர் என, 3,741 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 897 734 5செங்கல்பட்டு 13,841 9,900 242சென்னை 97,575 82,764 2,076கோவை 4,344 2,611 46கடலுார் 2,788 1,718 25தர்மபுரி 750 465 3திண்டுக்கல் 2,622 1,892 43ஈரோடு 680 471 9கள்ளக்குறிச்சி 3,633 2,444 22காஞ்சிபுரம் 8,422 5,120 106கன்னியாகுமரி 4,275 2,299 33கரூர் 431 251 9கிருஷ்ணகிரி 924 394 14மதுரை 10,618 7,995 231நாகை 657 360 7நாமக்கல் 604 305 5நீலகிரி 735 581 2பெரம்பலுார் 395 236 3புதுக்கோட்டை 1,926 1,110 22ராமநாதபுரம் 3,169 2,410 60ராணிப்பேட்டை 4,491 2,802 29சேலம் 3,428 2,313 27சிவகங்கை 2,226 1,726 41தென்காசி 1,911 944 16தஞ்சாவூர் 2,554 1,460 20தேனி 4,468 2,470 53திருப்பத்துார் 1,052 641 11திருவள்ளூர் 13,184 8,872 226திருவண்ணாமலை 5,823 4,002 55திருவாரூர் 1,661 952 6துாத்துக்குடி 6,591 4,124 38திருநெல்வேலி 4,729 2,745 27திருப்பூர் 795 472 8திருச்சி 3,889 2,420 60வேலுார் 5,492 4,191 53விழுப்புரம் 3,499 2,504 33விருதுநகர் 7,256 4,664 74வெளிநாட்டில் இருந்து வந்தோர் 805 659 1உள்நாட்டு விமான பயணியர் 549 439 0ரயில் பயணியர் 425 439 0மொத்தம் 2,34,114 1,72,883 3,741

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X