பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் துறைக்கு பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை : ஆதிதிராவிடர் நல இயக்ககம் மற்றும் பழங்குடியினர் நல இயக்ககம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் தயார் செய்து, பதவி உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆதிதிராவிடர் நல இயக்ககம், பழங்குடியினர் நல இயக்ககம், தனித்தனியே செயல்பட்டு வருகின்றன.பழங்குடியினர் நலத் துறை பணியாளர்களுக்கு, தனியாக முதுநிலைப் பட்டியல் தயார் செய்து, பதவி உயர்வு வழங்க, 2017ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதேபோல், ஆதிதிராவிடர் நல இயக்ககம், பழங்குடியினர் நல இயக்ககம் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, பதவி வாரியாக, ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் தயாரித்து, அதன் அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, ஆதிதிராவிட இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதை பரிசீலனை செய்த அரசு, ஆதிதிராவிடர் நலத் துறை, பழங்குடியினர் நலத்துறை பணியாளர் களுக்கு, ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல், ஆதி திராவிடர் நலத்துறையால், தயார் செய்யப்பட வேண்டும்.துறைத் தலைவர்கள் அடங்கிய, உயர்மட்டக் குழு ஒப்புதல் பெற்று, ஒருங்கிணைந்த பணி மூப்பு பட்டியல், வெளியிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.உயர்மட்ட குழு தலைவராக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X