கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களை தண்டிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்படுத்துதல்சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:பொது சுகாதார சட்டம், 1939ல் இயற்றப்பட்டது. அதன்படி, பொதுமக்களுக்கு சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும். தெருக்களில் குப்பை களை குவிக்க, இந்த சட்டம் தடை விதிக்கிறது.பொது இடங்களில் புகைப்பிடிக்க, எச்சில் துப்ப தடை விதித்து, 2002ல் சட்டம் வந்தது. இந்த சட்டம் வெறும் காகித அளவில் தான் உள்ளது; நடைமுறைப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில், மக்கள் தொகைக்கு ஏற்ப, பொது இடங்களில் கழிப்பறைகள் இல்லை. இருக்கிற கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை; அதை கண்காணிப்பதும் இல்லை. பொது இடங்களில் எச்சில் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. தடைஎனவே... பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கவும், அவர்களை தண்டிக்கவும், உத்தரவிட வேண்டும். மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை, அறிவியல் பூர்வமாக பிரித்து, கையாள வேண்டும்.  அரசு, தனியார் நிறுவனங்களில், போதிய கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சாலை ஓரங்களில் வசிப்பவர்களை, தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202014:16:08 IST Report Abuse
Bhaskaran எச்சில் துப்புபவர்கள் சென்னையில் தான் மிக அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X