கேரளாவில் இதுவரை 11,369 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்| 11,369 people have recovered from coronavirus in Kerala | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் இதுவரை 11,369 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (2)
Share
kerala, corona, coronavirus, covid 19, கேரளா, கொரோனா, குணம், தொற்று, பலி,

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை மொத்தம் 11,369 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

ஒரு நாளில் மட்டும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 146 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 126 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 58 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 56 பேர், பத்தனம் திட்டா மாவட்டத்தில் 41 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 36 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 35 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 34 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 30 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 28 பேர் , இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 19 பேர், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், கண்ணூர் மாவட்டத்தில் மூன்று பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 10,350 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் கேரளாவில் நேற்று (ஜூலை:29) நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 903 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உடையவர்களின் தொடர்பு மூலமாக 706 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் 71 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.

கொரோனா பாதித்தவர்களில் ஒருவர் பலியானார் அவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான குட்டி ஹாசன். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஜூலை:29) மட்டும் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 213 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 87 பேருக்கும் கொல்லம் மாவட்டத்தில் 84 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 83 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 67 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 54 பேருக்கும், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 49 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 43 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 42 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 38 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 31 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.


latest tamil newsகடந்த 24 மணி நேரத்தில் 23,924 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,33,413 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 7,037 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X