பொது செய்தி

தமிழ்நாடு

'எம் - சாண்ட்' லாரிகள் மீது கூடுதல் கண்காணிப்பு

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சென்னைக்குள் வரும், 'எம் - சாண்ட்' லாரிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், பல்வேறு புதிய வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். இந்த வகையில், கூழாங்கற்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, 'ஒயிட் எம் - சாண்ட்' என்ற பெயரில், ஆற்று மணல் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன.இதுகுறித்து, நம் நாளிதழில், இம்மாதம், 27ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, எம் - சாண்ட் லாரிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு, மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் கூறியதாவது:இரண்டு நாட்களாக அதிக பாரத்துடன், எம் - சாண்ட் ஏற்றி வரும் லாரிகள் தீவிரமாக கண்காணிப்படுகின்றன.

அதிக பாரத்துடன் வரும் லாரிகளை, போக்குவரத்து விதிமீறலாக வழக்கு பதிவு செய்வதுடன், அதில் எடுத்து வரப்படும் மணல், ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.வருவாய் துறை, காவல் துறை உயரதிகாரிகள், இதில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். விசாரணை தீவிரமடைந்தால், மணல் கடத்தல் கும்பல்களில் அட்டுழியம் ஒடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202014:17:24 IST Report Abuse
Bhaskaran கடற்கரை மணலை தண்ணீரால் அலசி ஆற்றுமணலுடன் சேர்த்து விற்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X