மணிப்பூரில் முதல் உயிரிழப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மணிப்பூரில் முதல் உயிரிழப்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020
Share

இம்பால்: மணிப்பூரில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,317 ஆக உள்ளது. இதில், 705 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்; 1,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மாநிலத்தில், வைரசால், முதல் உயிரிழப்பு நேற்று நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த அந்த நபர், 56 வயதான ஆண் என்றும், தலைநகர் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில், கடந்த மே, 22ம் தேதி, அவர் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X