பொது செய்தி

இந்தியா

எல்லையில் அத்துமீறும் நேபாளிகள் தீர்வு காண மாநில அரசு முடிவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சம்பாவத் : உத்தரகண்ட் எல்லைக்குள், நேபாள மக்கள் அத்துமீறி நுழையும் விவகாரம் குறித்து, நேபாள அதிகாரிகளுடன் பேச்சு நடத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள தனக்பூர் பகுதிக்குள், நேபாள மக்கள், அத்துமீறி நுழைவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பாவத் காவல் துறை கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் நேற்று முன்தினம் கூறியதாவது:இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ள தனக்பூர் பகுதிக்குள், நேபாள மக்கள் அத்துமீறி நுழைவது தொடர் பிரச்னையாக உள்ளது.

ஆளில்லா பகுதிக்குள் நடக்கும் இந்த அத்துமீறல் குறித்து, நேபாள எல்லை மாவட்டமான கான்சன்பூர் அதிகாரிகளுடன், விரைவில் பேச்சு நடத்தஉள்ளோம்.எல்லையில் உள்ள துாண் எண், 811க்கு அருகே, நேபாள தரப்பினர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.இதுவும், இந்தியாவிற்கு கவலை தரும் விஷயமாக உள்ளது. இந்த விவகாரத்திலும் நேபாள அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X