பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் முதன் முறையாக இயந்திரம் மூலம் ரயில் தட பணி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் சரக்கு ரயில் தடம் பதிக்கும் பணி, முதன் முறையாக, தானியங்கி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய ரயில்வே, சரக்கு ரயில் போக்குவரத்துக்கு, பிரத்யேக ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த, டி.எப்.சி.சி.ஐ.எல்., நிறுவனம், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், இந்த தடத்தை அமைத்து வருகிறது. இந்தியாவில், இப்பணிக்காக, முதன் முறையாக, என்.டி.சி., எனப்படும் தானியங்கி இயந்திரம் பயன்படுத்தப் படுகிறது. ரயில்வே பணியாளர்கள், 8 மணி நேரத்தில், 600 அடி ரயில் தடத்தை அமைப்பது வழக்கம். இதே நேரத்தில், என்.டி.சி., இயந்திரம், 1.5 கி.மீ., துாரத்திற்கு, அதாவது, 5,000 அடி துாரத்திற்கு ரயில் தடத்தை, கச்சிதமாக, பிசிறின்றி துல்லியமாக பொருத்தி விடுகிறது.

இந்நிலையில், நேற்று, உத்தரபிரதேசத்தில், குர்ஜா-தாத்ரி சரக்கு ரயில் தடப் பணிகளை, 'நிடி ஆயோக்' துணை தலைவர், ராஜீவ் குமார், ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து, ராஜீவ் குமார்,''சரக்கு ரயில் தடம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்'' என, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். '' என்.டி.சி., இயந்திரத்தின் உதவியால், இலக்கை விட முன்னதாக, 2021 டிசம்பரில் திட்டப் பணிகள் முடிந்து விடும்,'' என, வி.கே.யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X