பொது செய்தி

இந்தியா

அயோத்தி வர முயற்சிக்காதீர்கள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

அயோத்தி : ராமர் கோவில் கட்டுமானத்திற்கான, அடிக்கல் நாட்டு விழா, வரும், 5ம் தேதி நடைபெறும் நிலையில், 'ராமபிரான் பக்தர்கள், அயோத்தி வர முயற்சிக்காமல், வீட்டில் தீபமேற்றி வழிபாடு நடத்துங்கள்' என, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கூறியுள்ளது.

கேள்விக்குறி : உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்ற அனுமதி தந்ததை தொடர்ந்து, மத்திய அரசு, 'ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற அறக்கட்டளையை அமைத்தது.இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. விழாவில், பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட, பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதேபோல், இவ்விழாவில் கலந்து கொள்ள, ராமபிரானின் பக்தர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்வது, கேள்விக்குறியாகி உள்ளது.நேரடி ஒளிபரப்புஇதுகுறித்து, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீ ராம ஜன்ம பூமி மந்திர் கட்டுமான இயக்கம், 1984ல் துவங்கப்பட்டது. இது, கோடிக்கணக்கான ராமபிரான் பக்தர்களின் ஆதரவை பெற்றுள்ளது. பக்தர்கள் அனைவரும், கோவில் கட்டுமான பூமி பூஜையில் பங்கேற்க, ஆவலுடன் உள்ளனர்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அவர்கள் விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, பக்தர்கள் கவலை அடைய வேண்டாம். அவர்கள், அயோத்தி வருவதற்கான முயற்சிகளை கைவிட்டு, தங்கள் வீடுகளில் இருந்து, 'டிவி'யில், இந்த பிரமாண்ட விழாவின் நேரடி ஒளிபரப்பை காணலாம். அத்துடன், மாலை நேரத்தில், வீட்டிலேயே தீபமேற்றி ராமபிரானை வழிபடலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மசூதி அமைக்க புதிய அறக்கட்டளைஉச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அயோத்தியின் தன்னபூர் கிராமத்தில், அரசு வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில், புதிய மசூதி கட்டுவதற்காக, இந்தோ - இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை, மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்து உள்ளது.

இதுகுறித்து, அதன் தலைவர், ஜூபர் அகமது பரூக்கி, நேற்று கூறியதாவது:புதிய மசூதி அமைக்க, 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின், தலைவர் மற்றும் தலைமை அறங்காவலர் பொறுப்புகளை, மாநில சன்னி வக்பு வாரிய தலைவர் ஏற்பார்.அந்த இடத்தில், ஒரு மசூதி, இந்தோ- - இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், நுாலகம் மற்றும் மருத்துவமனை அமைக்கும் பணிகளை, அறக்கட்டளை மேற்கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X