சென்னை : ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு, கூடுதலாக, 7 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, பெயர் மாற்றம் செய்துள்ளது. இங்கு, 50.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெ.,க்கு தனி நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.தற்போது, பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கட்டுமான பணிகளுக்கு, 7 கோடி ரூபாயை கூடுதலாக வழங்குமாறு, பொதுப்பணித் துறை வாயிலாக, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, தற்போது, கட்டுமான பணிகளுக்கு, 7 கோடி ரூபாயை கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
நினைவிடத்தில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி அரங்கம், ஒலி, ஒளி வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு, கூடுதலாக, 10 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இது, நிதித் துறையின் பரிசீலனையில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE