கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கேரள மருத்துவ கழிவுகள்: ஐகோர்ட் அதிரடி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மதுரை : தமிழக எல்லையில், கேரள மருத்துவ கழிவுகள் குவிக்கப்படுவதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், புளியரை பரவன்பற்றுகளத்தை சேர்ந்த மாடசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லையில் கோட்டைவாசல் உள்ளது. இதன் அருகே, புளியரை ஊராட்சியில், போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. அரிசி, தானியம், விவசாய விளைபொருட்களை கிராம மக்கள் கொண்டு செல்லும் போது, ஆவணங்களை சமர்ப்பித்தாலும், போலீசார் தடுக்கின்றனர்.புளியரை சோதனைச் சாவடியிலிருந்து, 5 கி.மீ.,யில், கோட்டைவாசல் உள்ளது.

இடைப்பட்ட பகுதியில், கேரளாவிலிருந்து கொண்டு வரும் மருத்துவ கழிவுகளை குவிக்கின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.கோட்டைவாசலில், 30 ஆண்டுகளுக்கு முன், சோதனைச் சாவடி செயல்பட்டது. மீண்டும் அங்கு மாற்றக் கோரி, தென்காசி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் உத்தரவு: தமிழக எல்லையில், கேரள மருத்துவ கழிவுகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு, குவிக்கப்படுவதை கட்டுப்படுத்த, மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தென்காசி கலெக்டர், எஸ்.பி., ஆக., 17ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X